மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/11/2017 9:19:25 AM ஹொரவபொதானையில் 250ஆவது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

ஹொரவபொதானையில் 250ஆவது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

[2017/09/10]

ஹொரவபொதான ரிடிகஹவெவ பிரதேசத்திலுள்ள மொரகெவ ஸ்ரீ சதர்மஜோதிகரம விகாரயில் நிறுவப்பட்ட 250ஆவது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இன்று (செப்டம்பர், 10) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இக்குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சிறுநீரக நோய்தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் இலங்கை கடற்படை ஆகியன 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதியின் “அனைவருக்கும் நல்வாழ்வு” எனும் நோக்கிற்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறந்த முன்னெடுப்பகும்.

இந்நிகழ்வில், விவசாயத்துறை அமைச்சர் கௌரவ. துமிந்த திஸாநாயக்க, கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் கௌரவ. பி ஹரிசன், பாதுகாப்பு படைகளின் பிரதாணி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா ஆகியோர் கலந்துகொண்டனர். இதேவேளை ஜனாதிபதியினால் மேலும் 10 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அனுராதபுர மாவட்ட பொதுமக்கள் பாவனக்காகவும் வழங்க்கி வைக்கப்பட்டது.

கடற்படையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல சமூக சேவை திட்டங்களில் சிறந்த ஒரு திட்டமாக சிறுநீரக நோய்களிலிருந்து மக்களை பாதுக்காக்கும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் திட்டம் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை இலங்கை கடற்படை வீரர்கள் செய்துள்ளனர்.

கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் சிறுநீரக நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி செயலணியின் நிதி அனுசரணையுடன் நாட்டின் பல பாகங்களிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியதன் மூலம் சுமார் 119,000க்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் 81,500க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சுத்தமான குடிநீரை பெற்றுகொள்ளள உதவியுள்ளது.

மேலும், சிறு நீரக நோய் பரவளாக காணப்பட்ட பிரதேசங்களில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்