மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/12/2017 7:42:22 AM மண்சரிவு பாதிப்பிலிருந்து பாடசாலையைப் பாதுகாக்கும் பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுப்பு

மண்சரிவு பாதிப்பிலிருந்து பாடசாலையைப் பாதுகாக்கும் பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுப்பு

[2017/09/11]

இரத்தினபுரி சுமனா பாலிகா வித்தியாலய வளாகத்தில் மண்சரிவு அபாயகரமான சூழ்நிலையில் காணப்பட்ட பகுதிகளில் மண்மூட்டைகள் நிரப்பப்பட்ட மண் அணைகள் அமைக்கும் பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாதுகாப்பு பணிகளில் மேற்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை கட்டிடங்களுக்கு ஏற்படவிருந்த பாதிப்பினை தடுக்கும் இச் செயற்றிட்டத்தில் 8ஆவது கெமுனு காலாட் படையணியின் 21 படை வீரர்கள் பங்கேற்றனர். சுற்றிலும் மலைகள் சூழப்பட்ட குறித்த நிலப்பகுதியில் கடந்த தினங்களில் ஏற்பட்டிருந்த சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை வளாகத்தில் இந்நிலைமை உருவாகியிருந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் ஏற்படவிருந்த பாரிய மண்சரிவு அனர்த்தம் பாடசாலை நிருவாகத்தினால் அருகாமையிலுள்ள இராணுவ முகாமிற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டதன் மூலம் தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்