மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/17/2017 2:36:50 PM மூன்றாவது முறையாக ஐ.நா பொதுச் சபை அமர்வில் உரை நிகழ்த்த ஜனாதிபதி அமெரிக்கா விஜயம்

மூன்றாவது முறையாக ஐ.நா பொதுச் சபை அமர்வில் உரை நிகழ்த்த ஜனாதிபதி அமெரிக்கா விஜயம்.

[2017/09/17]

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுச் சபை அமர்வில் உரை நிகழ்த்துவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாளை (17) பிற்பகல் அமெரிக்காவிற்கு பயணமாகிறார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உரை நிகழ்த்தும் மூன்றாவது பொதுச் சபை அமர்வு இதுவாகும்.

”மக்களை மையமாகக் கொண்ட பேண்தகு உலகில் சகலருக்கும் கௌரவமான வாழ்க்கை மற்றும் சமாதானத்திற்காக பாடுபடல்”. (Focusing on people : Striving for peace and a decent life for all on a sustainable planet) எனும் தொனிப்பொருளில் 72வது பொதுச் சபை அமர்வு நியுயோர்க் நகரத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

பொதுச் சபையின் பிரதான அமர்வு செப்டெம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் அன்று பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

மேலும் இலங்கையின் அரசியல் நிலைமைகள், நல்லிணக்கம் மற்றும் சமாதானம், 2017ஆம் ஆண்டினை வறுமையிலிருந்து மீட்சிபெறும் வருடமாக பிரகடனப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் மற்றும் பசுமை அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி அவர்களால் இதன்போது உலகத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்படும்.

அத்துடன் அமர்வில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் பலருடனும் ஜனாதிபதி அவர்கள் கலந்துரையாடவுள்ளார்.

செப்டெம்பர் 23ஆம் திகதி வரை மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் அங்கு வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் மேலும் பல நிகழ்வுகளிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

நன்றி : ஜனாதிபதி செய்தி ஊடகம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்