மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/18/2017 2:10:28 PM இந்து - லங்கா கூட்டுப்பயிற்சியில் கலந்துகொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின

இந்து - லங்கா கூட்டுப்பயிற்சியில் கலந்துகொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின

[2017/09/18]

இம்மாதம் (செப்டம்பர்) 04ம் திகதி இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை கடற்படைக்குச் சொந்தமான எஸ்எல்என்எஸ் சயுற மற்றும் எஸ்எல்என்எஸ் சாகர ஆகிய இரண்டு கடற்படை கப்பல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற கூட்டுப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்து அண்மையில் (செப்டம்பர், 17) நாடு திரும்பியுள்ளன.

திருகோணமலைக்கு வருகைதந்த எஸ்எல்என்எஸ் சயுற கடற்படை மரபுகளுக்கு அமைய மரியாதை செலுத்தி வரவேட்கப்பட்டுள்ளது. இதேவேளை எஸ்எல்என்எஸ் சாகர தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு வந்து சேரும் வழியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

குறித்த நிகழ்விற்கு கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன, கடற்படையின் கொடிவரிசை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் கபில சமரவீர உள்ளிட்ட சிரேஷ்ட பல கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற “எஸ்எல்இன்எக்ஸ்2017' கூட்டுப்பயிற்சியானது இம்மாதம் 07ம் திகதிமுதல் 14ம் திகதிவரை இந்தியாவில் இருநாடுகளுக்கிடையில் இடம்பெற்றுள்ளன. இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கடற்படை பணிகள், கப்பல் பயணம், தொடர்பாடல், கப்பல்களுக்கிடையில் நபர்கள் மற்றும் பொருட்களை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் ஹெலிகொப்டர் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பயிற்சி விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்