மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/19/2017 11:21:28 AM அஹங்கம கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்க இராணுவத்தினர் உதவி

அஹங்கம கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்க இராணுவத்தினர் உதவி

[2017/09/19]

கட்டிடம் சரிந்துவிழுந்ததன் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கித்தவிபோரை மீட்பதற்காக இராணுவத்தினர் அஹங்கம விரைந்துள்ளனர். நேற்றய தினம் (செப்டம்பர், 18) இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இராணுவ படைப்பிரிவினர் அங்கு சென்றதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி அஹங்கம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஐந்து மாடிகளைக்கொண்ட கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்ததில் 8 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை மீட்பதற்காக மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின்கீழ் பணிபுரியும் 58வது பிரிவின் 16ஆவது தொண்டர், கெமுனு வொச் படைப்பிரிவுகளை சேர்ந்த இராணுவ வீரர்கள் திங்கள் பகல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, விமானப்படை, காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் மீட்பு மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவப் படையினருக்கு உதவியுள்ளனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்