மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/20/2017 7:06:22 PM மத்தள விமான நிலையத்தில் “நீர்க்காக கூட்டு பயிற்சி” யின் பணயக்கைதிகளை விடுவிக்கும் காட்சிகள்

மத்தள விமான நிலையத்தில் “நீர்க்காக கூட்டு பயிற்சி” யின் பணயக்கைதிகளை விடுவிக்கும் காட்சிகள்

[2017/09/20]

ஹம்பாந்தோட்டை மத்தள மகிந்த ராஜபக்க்ஷ விமான நிலையத்தில் இடம்பெற்ற போர் களமுறைப் பயிற்சியான “நீர்க்காக கூட்டு பயிற்சி” யின் இறுதிகாட்சிகளாக விமான கடத்தல் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் காட்சிகள் செய்முறைக் காட்சிகளாக அரங்கேற்றப்பட்டன. நேற்றய தினம் இடம்பெற்ற (செப்டம்பர், 19) இச்செய்முறைக் காட்சிகளில் விமான கடத்தல் மற்றும் பணயக்கைதிகள் விடுவிக்கும் குழுவில் உள்ளடங்கும் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோப் படை பிரிவினர் பங்கேற்றனர்.

நாற்பத்தெட்டு கொமாண்டோ படை வீரர்கள் ஆறு அணிகளாகப் பிரிக்கப்பட்டு குறித்த செய்முறைக் காட்சியில் பங்குகொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்களமுறைப் பயிற்சியில் கட்டிடங்களில் சிக்கிக்கொண்ட பணயக்கைதிகளை மீட்கும் உத்திகள், பிரமுகர்களை மீட்கும் வகையில் பயன்படுத்தப் படும் வாகன உத்திகள் மற்றும் ஹெலிஹொப்டர் இருந்து கயிற்றினை பயன்படுத்தி அருகே உள்ள செங்குத்து மேற்பரப்பில் இறங்கும் முறைகள் என்பன செய்முறைக் காட்சிகளாக அரங்கேற்றப்பட்டன.

இந் நிகழ்வில் கூட்டுப்பயிற்சியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

தொடர்பான செயதிகள் >>

'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII” நிறைவுக்கட்டத்தில்

நடைபெற்றுவரும் 'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII ' தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும், பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு விளக்கமளிப்பு

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை ஆரம்பம்

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை செப்டம்பரில் ஆரம்பம்

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி VIII–2017” செப்டெம்பரில் ஆரம்பம்

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி – VII” சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது

நீர்க்காக தாக்குதல் பயிற்சி - VII வெற்றிகரமாக நிறைவு

நீர்க்காக தாக்குதல் பயிற்சி 2016 இறுதிகட்ட நடவடிக்கைகளுக்கு தயார

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி ஆரம்பம்

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி செப்டெம்பரில் ஆரம்பம


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்