மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/22/2017 5:32:32 PM முப்படை வீரர்கள் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்- 2017 நடவடிக்கைகளில் சிறப்பாக முன்னெடுப்பு.

முப்படை வீரர்கள் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்- 2017 நடவடிக்கைகளில் சிறப்பாக முன்னெடுப்பு.

[2017/09/22]

டெங்கு வாரத்தினை முன்னிட்டு தற்பொழுது நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பெரும் எண்ணிக்கையிலான முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இம்மாதம் (செப்டம்பர்) 20ம் திகதி முதல் 26ம் திகதிவரை முன்ன்னேடுக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக தேசிய ரீதியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுகிறது. குறித்த வாரத்தில் பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து நாட்டின் 136 சுகாதார வைத்திய அதிகார்கள் காரியாலயத்தின் ஊடாக மிகவும் ஆபத்தான பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த வாரத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுமார் மூவாயிரம் (2958) முப்படை வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இராணுவத் தகவவள்களின் பிரகாரம், 1790 இராணுவ வீரர்கள், 573 கடற்படை வீரர்கள், 330 விமானப் படை வீரர்கள் மற்றும் 265 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்