மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/24/2017 7:34:30 PM அங்கவீனமுற்ற இராணுவ படை வீரர்ககள் புனித யாத்திரையில்

அங்கவீனமுற்ற இராணுவ படை வீரர்ககள் புனித யாத்திரையில்

[2017/09/24]

 

அங்கவீனமுற்ற இராணுவ படை வீரர்ககள் 10 பேரைக் கொண்ட குழுவினர் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு புனித யாத்திரையினை மேற்கொள்வதற்காக நேற்று (செப்டம்பர், 23 ) புறப்பட்டு சென்றுள்ளனர்

இராணுவ தகவல்களின் பிரகாரம், இப்புனித யாத்திரையினை மேற்கொள்ளும் வகையில், இலங்கை இராணுவ புனர்வாழ்வு பணியகத்தினால் உதவியளிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் புத்காயா, வாரணாசி போன்ற இடங்களையும், நேபாளத்தில் லும்பினி போன்ற இடங்களையும் பார்வையிடுவதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இப்பத்து போர் வீரர்களும் அபினன்சலா, மிஹின்டிசத் மெதுரா மற்றும் ரணவிரு செவனா ஆகிய பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இக்குழுவில் ஒரு மருத்துவ அதிகாரி, இரண்டு ஆண் தாதியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உள்ளிட்டோர் இவர்களுடன் சென்றுள்ளனர்

இவ்விஜயத்தின் போது இவர்களுக்கு தேவையான தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக பொருத்தமான விடுதி வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்