மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/27/2017 4:01:47 PM கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் படையினர்

கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் படையினர்

[2017/09/27]

தேசிய கடல்சார் வள பாதுகாப்பு வாரத்தினை (செப்டம்பர்,15-23) முன்னிட்டு கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வுகள் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்ட்டுள்ளன.

இதன்பிரகாரம், மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகம் ஆகியவற்றின் கீழுலுள்ள படைவீரர்களினால் தங்கல்லை மற்றும் அம்பாறை பிரதேச கடற்கரைகள் இருவேறு நிகழ்வுகளின்போது சுத்தம் செய்யப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதன் ஒரு பிரிவாக (செப்டம்பர்) 20ஆம் திகதி குடா வெல்ல பகுதியில் மற்றுமொரு கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டம் 122 படைப் பிரிவைசேர்ந்த சுமார் 100 க்கும் அதிகமான படை வீரர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரசித்திபெற்ற கடற்கரைகளான அறுகம் குடா, கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேச கடற்கரைகள் 241ஆம் மற்றும் 242 ஆம் படைப் பிரிவுகளைச்சேர்ந்த படை வீரர்களால் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சுத்தம் செய்யும் செயற்பாடுகள் கடல்வள சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அதிகாரசபை, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள், சக படைகள், காவல்துறையினர், சிவில் அமைப்புகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் குறித்த சேவையில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்