மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/3/2017 11:49:59 AM கிளிநொச்சியில் பாரிய மரநடுகை செயற்த்திட்டம் படையினரால் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் பாரிய மரநடுகை செயற்த்திட்டம் படையினரால் முன்னெடுப்பு

[2017/10/01]

இலங்கை இராணுவம் கிளிநொச்சியில் பாரிய மரநடுகை செயற்த்திட்டமான 135,000 மரக் கன்றுகளை நடும் செயற்த்திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த “வனரோப” எனும் தேசிய மரநடுகை செயற்திட்டத்தினை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையாகத்தினால் ஆரம்பித்த்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வினை முன்னிட்டு கிளிநொச்சியில் 25ஆம் (செப்டம்பர்) திகதி இடம்பெற்ற மரக் கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வின்போது, பொதும்மக்கள் மற்றும் படையினர்களுக்கு மத்தியில் 2,000 மரக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டதாகவும், இம் மரக் கன்றுகள் 57ஆவது பிரிவில் சேவை புரியும் படையினரிடம் இருந்து சேகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சுமார் 100,000 மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், மீதமான 35,000 மரக் கன்றுகளை கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும் 57ஆவது பிரிவு படையினர்களுக்கும் விநியோகிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பலா, தென்னை, கும்புக், வேம்பு, தோடை, மரமுந்திரிகை, வீரை, பாலை, பாக்கு, ஈரப்பலா போன்ற இன்னும்பல மரக் கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு இடம்பெற்ற மரக் கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வின்போது, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ வீரர்களும் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்