மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/3/2017 11:17:31 AM அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கைக்கு வருகை

அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கைக்கு வருகை

[2017/10/03]

அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் 2017ஆம் ஆண்டுக்கான கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக திங்களன்று (ஒக்டோபர், 02) திருகோணமலைக்கு வந்தடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு உலங்குவானூர்திகளை தரையிறக்கும் வசதிகளைக் கொண்ட குறித்த கப்பல், 210மீட்டர் நீளமும் 32 மீட்டர் அகலமும் உடையது. மேலும், இக்கப்பல் குறித்த பயிற்சியினை நிறைவு செய்தபின்னர் எதிவரும் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர், 06) நாட்டை விட்டு புறப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கடற்படை ஆகியவற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான 23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் நேற்று (ஒக்டோபர், 02) திருகோணமலையில் ஆரம்பிக்க ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்