மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/9/2017 9:59:16 AM கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு

கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு

[2017/10/08]

 

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கடற்படை ஆகியவற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான 23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் வெள்ளிக்கிழமையன்று (ஒக்டோபர், 06) வெற்றிகரமாக நிறைவுற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து நாட்களைக்கொண்ட குறித்த பயிற்சி நடவடிக்கைகள் இம்மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றதுடன், கடல்சார் பாதுகாப்பு திறமைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான தயார்நிலை என்பன இதன்போது பிரதானமாக கவனம்செலுத்தப்பட்டது. மேலும், சிறிய ரக படகு நடவடிக்கைகள், சாட்சியங்கள் சேகரிப்பு, சுழியோடி நடைமுறைகள், பயங்கரவாத எதிர்ப்புகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் சமூக அபிவிருத்தி திட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றின் ஊடாக இராணுவ பங்கேற்பாளர்களுக்கு இடையே உறவுகளை பலப்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் இப் பயிற்சி நடவடிக்கையின்போது உள்ளடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1995ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட CARAT எனும் குறித்த பயிற்சி நடவடிக்கையின் ஊடாக, தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கிடையே கடல்வழி பாதுகாப்பு முன்னுரிமைகளை பகிர்ந்து கொள்ளல், பயிற்சி நடவடிக்கையில் பங்கேற்கும் படையினருக்கிடையே இயங்குதன்மையை மேம்படுத்தல், கடற்படை கூட்டணியை நிலைத்திருக்கும் வகையில் அபிவிருத்தி செய்தல் என்பன இதன் பிரதான நோக்கமாக காணப்படுகிறது.

தொடர்பான செயதிகள் >>

கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் ஆரம்பம


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்