மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/13/2017 11:59:13 AM பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி சங்கத்தினால் 'கீ ரசவிந்தன' இசைக்கச்சேரி

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி சங்கத்தினால் 'கீ ரசவிந்தன' இசைக்கச்சேரி

[2017/10/13]

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இசைக்கச்சேரி ஒன்று நேற்று (ஒக்டோபர், 12) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 'கீ ரசவிந்தன' எனும் இவ் இசைக்கச்சேரியில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இவ் இசைக்கச்சேரியில் பிரபல பாடகர் ஆனந்த செனரத்ன அவர்களால் பல இன்னிசை கீதங்கள் இசைக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் எழு பேருக்கு கல்வி புலமைப்பரிசில்களும் அளிக்கப்பட்டன. இதற்கிணங்க க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த சித்திபெற்ற மாணவ மாணவிகளுக்கு ரூபா. 25,000.00 பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அமைச்சின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்