மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/12/2017 4:39:54 PM சீன கடற்படை அதிகாரிகளுக்ககாக இலங்கை கடற்படை அதிகாரிகளினால் கலாசார நிகழ்வு

சீன கடற்படை அதிகாரிகளுக்ககாக இலங்கை கடற்படை அதிகாரிகளினால் கலாசார நிகழ்வு

[2017/11/12]

 

சீன மக்கள் விடுதலை இராணுவ - கடற்படை கப்பல் 'குய் ஜி குவாங்' அதிகாரிகளுக்கான கலாசார நிகழ்ச்சி ஒன்று இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் (நவம்பர், 11) இலங்கை கடற்படை கப்பல் ரங்கள வில் இடம்பெற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன கடற்படை அதிகாரிகளுக்கான கலாச்சார நிகழ்வில் இன்னிசை பல இசைக்கப்பட்டன. அத்துடன் இணைந்த தாக பல நிகழ்ச்சிகள் இக்கலாச்சார நிகழ்வை அலங்கரித்தன. இந்நிகழ்வுகளில் சீன அதிகாரிகளும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சீன மக்கள் விடுதலை இராணுவ - கடற்படை கப்பல் 'குய் ஜி குவாங்' ஐந்து நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (நவம்பர், 10) இலங்கையை வந்தடைந்தது.

163.5 மீற்றர் நீளம் மற்றும் 22.2 மீற்றர் அகலம் கொண்ட இக்கப்பல் 10,907 டன்கள் சுமந்து செல்லக்கூடியது.அத்துடன் இக்கப்பலில் 549 கடற்படை வீரர்கள் பயணிப்பதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது. குறித்த இக்கப்பல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டை புறப்பட்டு செல்லவுள்ளது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்