மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/14/2017 10:41:07 AM இலங்கை விமானப்படையினரால் புதிய வகுப்பறை கட்டடம் நிர்மாணிப்பு

இலங்கை விமானப்படையினரால் புதிய வகுப்பறை கட்டடம் நிர்மாணிப்பு

[2017/11/13]

இலங்கை விமானப்படையின் முயற்சினால் இரத்தினபுரி அயகம கனிஷ்ட வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறை கட்டடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் சமூக சேவை திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வகுப்பறை கட்டடம் அண்மையில் (நவம்பர், 02) இடம்பெற்ற நிகழ்வின்போது திறந்து வைக்கப்ட்டுள்ளது.

குறித்த பாடசாலை இவ்வருடம் (2017) மே மாதம் நாட்டில் இடம்பெற்ற மோசமான பாரிய வெள்ளத்தில் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, இலங்கை விமானப்படை அதன் சமூக சேவை திட்டத்தின் ஒரு அங்கமாக குறித்த வகுப்பறை கட்டடத்தை நிர்மாணிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளதுடன், இதற்கான நிதியினை இலங்கை விமானப்படை கட்டளைகள் நலன்புரி நிதியத்திலிருந்து பெறப்பட்டு இலங்கை விமானப்படையின் கடுகுருந்த நிலையத்தினூடாக இன் நிர்மாணப்பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப் புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழாவில், இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜெயம்பதி, இலங்கை விமானப்படை உபகரண சேவை வழங்கலுக்கான பணிப்பாளர் லொறிஸ் எயார் வைஸ் மார்ஷல் சகர கொடகதெனிய மற்றும் சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்