மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/14/2017 2:12:40 PM இராணுவத்தினர் சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் இணைவு

இராணுவத்தினர் சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் இணைவு

[2017/11/14]

நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் சூழல் பாதுகாப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கை இராணுவத்தினர் நாட்டின் பல பாகங்களிலும் மரக்கண்டுகள் நடுதல் மற்றும் கடற்கரை சுத்தம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளினை மேற்கொண்டுவருவதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம், கிழக்குப்பிராந்தியத்தின் வாகரை பிரதேச கடற்கரை சுத்தம் செய்யப்பட்டதுடன், மரநடுகை நிகழ்வு ஒன்றும் அண்மையில் (நவம்பர், 12) இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய பைன், சதுப்புநில தாவரம் மற்றும் தென்னை உட்பட 200க்கும் மேற்பட்ட மரக்கண்டுகள் நடப்பட்டுள்ளது. அத்துடன், பெரும் எண்ணிக்கையான இராணுவ வீரர்கள் வாகரை பகுதி கடற்கரையினை சுத்தம் செய்யும் நடவடிக்கையிலும் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, யாழ் பாதுகாப்பு தலைமையாகத்தை சேர்ந்த இராணுவத்தினர் பன்னாய் சந்தியில் இருந்து யாழ் குருநகர் கடலோரப் பகுதி வழியாக சுத்தம் செய்யும் நடவடிக்கையினை அண்மையில் (நவம்பர், 08) மேற்கொண்டுள்ளனர். இதன்போது 200க்கும் அதிகமான இராணுவத்தினர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்