மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/20/2017 9:50:14 PM செயலாளர் தலைமையிலான உள்நாட்டு தூதுக்குழுவினர் ஐ.நா. அமைதி காக்கும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பு

செயலாளர் தலைமையிலான உள்நாட்டு தூதுக்குழுவினர் ஐ.நா. அமைதி காக்கும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பு

[2017/11/20]

அண்மையில், கனடா வான்கூவர் நகரில் 2017ஆம் ஆண்டுக்கான ஐ.நா. அமைதி காக்கும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு கபில வைத்தியரத்ன அவர்கள் தலைமையில் உள்நாட்டு பிரதிநிகள் குழுவினர் பங்கேற்றுள்ளனர். இரண்டு நாட்கள் இடம்பெற்ற குறித்த மாநாடு கடந்த செவ்வாக்கிழமை (நவம்பர், 14) ஆரம்பமானது.

ஐந்து சர்வதேச அமைப்புக்களும் 79 நாடுகளைச் சேர்ந்த சுமார் 550க்கும் அதிகமான பிரதிநிதிகளும் இவ்வருடம் இடம்பெற்ற இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இரண்டாவது நாள் இடம்பெற்ற மாநாட்டு “உறுதிமொழி”யின் கீழ் 'புதிய கண்டுபிடிப்புக்கான பயிற்சி மற்றும் திறன் ஒருங்கமைப்பு’, 'ஆபத்தில் இருப்பவர்களை பாதுகாத்தல்' மற்றும் 'ஆரம்ப எச்சரிக்கை மற்றும் துரித வளர்ச்சி' ஆகிய பிரிவுகளிலும் அமர்வுகள் இடம்பெற்றது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செயலாளர் அவர்களால் “உறுதிமொழி”' முன்வைக்கப்பட்ட அதேவேளை, கனடிய பிரதம மந்திரி றுதேவ் அவர்களால் முதலாவது “உறுதிமொழி”' முன்வைக்கப்பட்டது.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்