மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 12/12/2017 2:00:56 PM குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய பலநோக்கு மாடிக்கட்டிடம்

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய பலநோக்கு மாடிக்கட்டிடம்

[2017/12/12]

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் (விரு தரு விதுபியச) புதிய மூன்று மாடி கட்டிடத்தொகுதியினை நிர்மாணிக்கப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (டிசம்பர், 11) இடம்பெற்றது.

மூன்று மாடி கட்டிடத்தொகுதியானது சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இக்கட்டிட தொகுதியில் கேட்போர்கூடம், 10 தொழிநுட்ப ஆய்வுகூடங்கள், கணனி மற்றும் அழகியற்கலை அறைகள், சுகாதார மற்றும் கழிவறை வசதிகள் என்பன அமைக்கப்படவுள்ளன. இக்கட்டிட தொகுதி இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இவ்வைபவத்தின் போது தரம் ஐந்து புலமைப்பரிசில்கள் பரீட்சையில் தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசுப்பொதி மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வைபவத்தில் வடமேல் மாகாண சபையின் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் கல்வி அமைச்சர் கௌரவ. லக்ஸ்மன் வெந்தருவ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி. அனோமா பொன்சேக்கா, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியானது சுமார் 56 மாணவர்கள் மற்றும் இரு ஆசிரியர்களுடன் 2009ஆம் ஆண்டு ஜனவரி 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இன்று இக்கல்லூரியில் முப்படை வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் சுமார் 1100 பிள்ளைகள் கல்வி பயிலுகின்றனர். மேலும், இப்பாடசாலையில் சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தொகுதியானது இவ்வாண்டு மார்ச் மாதம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்