மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/16/2018 11:52:08 AM இந்தியாவில் வருடாந்த இந்து – லங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல்

`

இந்தியாவில் வருடாந்த இந்து – லங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நிகழ்வு

[2018/01/14]

5 வது இலங்கை- இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் இம்மாதம் (ஜனவரி-2018) 09ஆம் திகதி இந்தியா புது டில்லியில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைக்கான தூதுக்குழுவினருக்கு பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் தலைமை வகித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பத்து அங்ககத்தவர்களைக் கொண்ட இந்திய தூதுக்குழுவினருக்கு அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ சஞ்சய் மித்ரா அவர்கள் தலைமை வகித்தார்.

குறித்த கலந்துடையாடல் நிகழ்வில் இராணுவத் தளபதி, லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு), திரு.ஆர்.எம்.எஸ். சரத் குமார, வெளியுறவு அமைச்சின் தென் ஆசிய மற்றும் சார்க் பிரிவுகளின் பணிப்பாளர் திரு.எம் ஏ கே கிரிஹகம, விமானப்படை அதிகாரிகளின் பிரதானி, ஏயார் வைஸ் மார்ஷல் ஜி.எல்.எஸ் டயஸ், இலங்கை கடற்படை நடவடிக்கைகளுக்கான பிரதம பணிப்பாளர், ரியர் எட்மிரல் பியால் டி சில்வா, இலங்கை கடலோர காவற்துறை பணிப்பாளர், ரியர் அட்மிரல் சமந்த விமலதூங்க மற்றும் மேஜர் ஜெனரல் ஜீ எல் ஜே வடுகே ஆகியோர் இலங்கைக்கான தூதுக்குழுவில் கலந்துகொண்டனர்.

வருடா வருடம் இடம்பெற்று வரும் இந்திய - இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடல் கடந்த 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இரு நேச நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை வழங்குதல் இதன் நோக்கமாகும்.

இதேவேளை, 4 வது இலங்கை- இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் கடந்த வருடம் (2017) 03ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

     

செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்