மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/16/2018 1:06:03 PM தைப்பொங்கள் தினவிழாவில் படையினர் இணைவு

தைப்பொங்கள் தினவிழாவில் படையினர் இணைவு

[2018/01/16]

தைப்பொங்கல் தமிழ் மக்களின் மிக முக்கியமான அறுவடை திருவிழாவாவாகும். நல்லெண்ணம் மற்றும் சகவாழ்வு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை இராணுவத்தினர் வடக்கில் பொதுமக்களுடன் இணைந்து இப் “பொங்கல்” விழாவினை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி,14) கொண்டாடியுள்ளனர்.

முல்லைதீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையக இராணுவத்தினர் கேப்பாப்பிலவில் அன்மையில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுடன் இணைந்து “பொங்கல்” திருவிழாவினை கொண்டாடியுள்ளனர். இதன்போது, படையினர் மீள் குடியேற்றப்பட்ட இக்கிராமத்தின் 85 குடும்பங்களுக்கு மதிய உணவு வழங்கிவைத்துள்ளனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் சிவன் கோவிலில் முல்லைதீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64ஆவது படைப் பிரிவினர் தைப் பொங்கள் தின விழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக இலவச உணவு வழங்கள் நிகழ்வு ஒன்றினை (ஜனவரி,14) ஏற்பாடு செய்திருந்ததுடன், இக்கோவிலில் சிரமதானப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. குறித்த நிகழ்வுகளில் 100 க்கும் அதிகமான இராணுவத்தினருடன் சுமார் 700 பக்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது இப்பிராந்தியத்திலுள்ள படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு நல்லாசி வேண்டி விஷேட பூஜை ஒன்றும் நிகழ்த்தப்பட்டடது.

.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்