மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/19/2018 11:00:57 AM இராணுவ வீரர்களினால் விஷவாயுக் கட்டுப்பாடு முன்னெடுப்பு

இராணுவ வீரர்களினால் விஷவாயுக் கட்டுப்பாடு முன்னெடுப்பு

[2018/01/19]

இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படையணியின் 14ஆவது இரசாயன ,உயிரியல் , கதிரியக்க மற்றும் அனுசக்தி படையினரால், களனிப் பிரதேச வெவெல்டுவ பிரதேசத்தில் அமையப்பெற்ற வீட்டு வளாக மண்ணில் நச்சு வாயுத் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒன்று அண்மையில் (ஜனவரி, 12) முன்னெடுக்கப்பட்டது.

இரசாயன ஆயுதங்களை கையாளுதலுக்கான தேசிய அதிகாரசபையினால் (NACWC) இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க, இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படையணியின் 14ஆவது இரசாயன ,உயிரியல் , கதிரியக்க மற்றும் அனுசக்தி படைப் பிரிவின் 17 வீரர்களைக் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அப்பிரதேசத்திற்கு விரைந்து சென்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இடத்தில் சோதனைகளை மேற்கொண்ட படையினர் அங்கு காணப்பட்ட மண்ணில் நச்சு வாயுவை விளைவிக்கும் அமோனிய அல்லது காபன் மொனொக்சைட் போன்ற இராசயன அமிலங்கள் காணப்பட்டதை கண்டறிந்துள்ளனர். மேலும் உரிமையாளரினால் குறித்த நிலப்பகுதியில் தொழிற்சாலை பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் மூலம் குறித்த பகுதி நிரப்பட்டுள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இராணுவப் பொறியியலாளர்ப் படையினரால் இரசாயனவியல் தாக்கம் உள்ள மண் தோண்டியெடுக்கப்பட்டு அதற்குப் பதிலீடாக புதிய நிரப்பப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்