மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/22/2018 3:18:45 PM எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்பு விரைவு

எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்பு விரைவு

[2018/01/22]

அண்மையில் (ஜனவரி, 16) கொலன்னாவ பகுதியில் ஏற்பட்ட எண்ணைக்கசிவினை தடுக்கும் வகையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய்க்கசிவு முகாமைத்துவ குழு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வரையறுக்கப்பட்ட எரிபொருள் களஞ்சியப்படுத்தும் முனையம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக உலை எண்ணெய் கசிதலை கட்டுப்படுத்த கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய்க்கசிவு முகாமைத்துவ குழு வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிகின்றன.

இதுபோன்ற சவால்மிகுந்த எண்ணெய் கசிவினால் ஏற்படும் சூழல் மாசுறுதலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் விஷேட நிபுணத்துவம் வாய்ந்த இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய்க்கசிவு முகாமைத்துவ குழு வீரர்கள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வரையறுக்கப்பட்ட எரிபொருள் களஞ்சியப்படுத்தும் முனையத்தில் ஏற்பட்ட உலை எண்ணெய் கசிதலால் ஏற்பட்ட சூழல் மாசுறுதலை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்து அகற்றும் வழிவகைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். மேலும் கடந்த வியாழக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மூலம் சுமார் 145,000 கிலோ லீற்றர் உலை எண்ணைகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்