மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/29/2018 12:15:16 PM சுத்தமான குடிநீரை பெறுவதற்கு இராணுவத்தினரின் உதவி

சுத்தமான குடிநீரை பெறுவதற்கு இராணுவத்தினரின் உதவி

[2018/01/28]

அண்மையில் (ஜனவரி, 25) புதிதாக மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியிலுள்ள குடிநீர் கிணறுகளை வடபகுதியிலுள்ள இலங்கை இராணுவத்தினர் சுத்தம் செய்துள்ளனர். பல வருடகாலமாக பயன்படுத்தப்படாமல் அண்மையில் விடுவிக்கப்பட்ட கேப்பாபிலவு பகுதியில் கைவிடப்பட்ட குடிநீர் கிணறுகளே இவ்வாறு முல்லைத்தீவு பாதகாப்பு படை தலைமையாக இராணுவத்தினரால் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்திடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த சமூகசேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் 24 கிணறுகளில் 12 கிணறுகள் சுத்திகரிக்கப்பட்துள்ளதுடன், ஏனைய கிணறுகள் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அடுத்த சில நாட்களில் நிறைவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினர் கடந்த வருடம் (2017) டிசம்பர் மாதம் சுமார் 133.34 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் காணப்பட்ட 28 வீடுகளை இராணுவத்தினர் தமது சொந்த செலவில் முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ளுக்கு நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது (டிசம்பர், 28) விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வருட புத்தாண்டு தினத்தில் நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஊடாக சென்று வள்ளப்பள்ளி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வீதியினை திறப்பதற்கான நடவடிக்கையினை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கைவிடப்பட்டிருந்த கோட்டை புள்ளையார் கோவிலினை சுத்தம் செய்ய இராணுவத்தினர் பொதுமக்களுக்கு உதவியதுடன், அங்கு விஷேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகள் இம்மாதம் 14ஆம் திகதி தைப்ப்ங்கள் தினத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்