மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/30/2018 4:33:31 PM வடக்கில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

வடக்கில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

[2018/01/30]

வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 2350 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் திங்களன்று (ஜனவரி, 29) இடம்பெற்றுள்ளன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன கெட்டியாரச்சி அவர்களது தனிப்பட்ட ஆர்வத்துடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்கு மலேசியா மகா கருணா பௌத்த மன்றம் கற்றல் உபகரணங்கள், புத்தக பைகள் மாற்றும் அப்பியாச புத்தகங்கள், உள்ளிட்ட கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பதற்கான அனுசரனையினை வழங்கியுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்திலுள்ள உடும்பிராயி இந்து கல்லூரி, உடுப்பிட்டி மகளீர் வித்தியாலயம், நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், இனுவில் ஆர்.சி.டி மகா வித்தியாலயம் மற்றும் சாவகச்சேரி இந்து கல்லூரி ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு வெவ்வேறாக இடம்பெற்ற நிகழ்வுகளின்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மஹா கருணா பௌத்த மன்றத்தின் சிரி சரனங்கரதேரர், உலக இளைஞர் கிக்சு மன்றத்தின் அநுராத தேரர், மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாடசாலை நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பிரதேச வாழ் மக்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, முல்லைத் தீவு பாதுகாப்புப் படையினர் மற்றுமொரு சமூக நலன்புரி திட்டமாக கேப்பபிளவு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையில் புதிய இரண்டு குடிநீர்த் தாங்கிகளை வெள்ளிக்கிழமை (ஜனவரி, 26) நிறுவியுள்ளனர். இதனூடாக புதிதாக மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பலரும் நன்மையடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்