மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/16/2018 11:17:49 AM பாடசாலளைகளுக்கிடையிலான பேண்ட் வாத்தியப்போட்டி நிகழ்வுக்கு இராணுவத்தினர் உதவ

பாடசாலளைகளுக்கிடையிலான பேண்ட் வாத்தியப்போட்டி நிகழ்வுக்கு இராணுவத்தினர் உதவி

[2018/03/15]

திருகோணமலையில் பாடசாலளைகளுக்கிடையிலான மேற்கத்திய பேண்ட் வாத்தியப்போட்டி நிகழ்வு ஒன்றினை ஏற்பாடுசெய்வதற்கு இலங்கை இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்துடன் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22 படைப்பிரிவினர் இணைந்து குறித்த நிகழ்வினை

திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியின் மைதானத்தில் அண்மையில் (மார்ச், 10) நடாத்தியுள்ளனர்.

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், மாணவர்களிடையே மேற்கத்திய பேண்ட் வாத்திய இசையில் தமது இயல்பார்ந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளத்தை அமைத்துக்கொடுப்பதே இப்போட்டி நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வின்போது சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது பேண்ட் வாத்திய இசைத்திறமைகளை காட்சிப்படுத்தியுள்ளதுடன், வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியன வழங்கிவைக்கப்பட்டன. மேலும் கஜபா படைப்பிரிவின் பேண்ட் வாத்திய குழு மற்றும் கொமாண்டோ படைப்பிரிவின் கே –ஏ குழு ஆகியோரின் பேண்ட் வாத்திய காட்சிகள் மற்றும் நாய்களின் சாகசக்க் காட்சிகள் இந்நிகழ்வினை மேலும் மெருகூட்டியது.

இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட அருட்தந்தை கலாநிதி நோல் எம்மானுவல், பொது உத்தியோகத்தர், 22ஆம் படைபிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களும் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்