மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/21/2018 4:32:28 PM பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி மையத்தினால் புதிய ப்ரெய்ல் சிங்கள மொழிபெயர்ப்பு மென்பொருள் உருவாக்கம்

பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி மையத்தினால் புதிய ப்ரெய்ல் சிங்கள மொழிபெயர்ப்பு மென்பொருள் உருவாக்கம்

[2018/03/21]

பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மையத்தினால் புதிதாக உருவாக்கப்பட்ட பிரெய்லி சிங்கள எழுத்துக்களை ஆதரிக்கும் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பு மென்பொருள் அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்களினால், பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச், 21) இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது இரத்மலானை விழிப்புலனற்றோர் பாடசாலையின் அதிபர் திரு. தேஸ்மன் பெரேரா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மையத்தினால் புதிதாக உருவாக்கப்பட்ட புதிய மென்பொருள், கல்வி மற்றும் தொழில் துறைகளில் பார்வைக் குறைபாடுகளையுடைய குறிப்பாக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் முகம் கொடுக்கும் சிரமங்களுக்கு மிகப்பொருத்தமான தீர்வை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.

இந்த புதிய மென்பொருள், குறித்த இத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையவுள்ளது, ஏனெனில் இப் புதிய மென்பொருள், நாட்டின் மற்றும் பிற இடங்களில் உள்ள பார்வை குறைபாடுள்ள சமூகம் எதிர்கொள்ளும் தகவல் தொடர்பு சிக்கல்களுக்கு பயனுள்ள தீர்வை வழங்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பார்வைக் குறைபாடு கொண்ட மக்களின் எழுத்தறிவு முக்கியமாக தொட்டுணரக்கூடிய எழுத்து மற்றும் வாசிப்பு மீது சார்ந்துள்ளது. லூயி பிரெய்ல் கண்டுபிடித்த பிரெயில் அமைப்பு, அத்தகைய மக்களின் வாசிப்பு மற்றும் எழுதப்பட்ட தொடர்புகளில் புது புரட்சியை ஏற்படுத்தியது. கணணி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட நவீன முன்னேற்றங்கள் அவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட நவீன மின்னணு பிரெய்ல் அமைப்புகள் சிங்களம் மொழியினை ஆதரிக்கும் தன்மையைக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர இந்த அமைப்புகள் பல ஆங்கில மொழிக்கு மட்டுமே உகந்ததாக காணப்பட்டது. " பிரெய்ல் சிங்கள மாற்றி" முக்கியமாக பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் பார்வையற்றவர்களின் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இது, பரீட்சை தாள்கள், விடைத்தாள் மற்றும் பிற ஆவணங்களின் மொழிபெயர்ப்பு செயல்முறை வேகத்தினை அதிகரிக்கிறது. அத்துடன் ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அறிஞர்கள் கற்பித்தல் செயல்முறைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந் நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ இணைப்பு அதிகாரி, ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மையத்தின் பணிப்பாளர், இரத்மலானை விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்