மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/2/2018 5:13:19 PM விமானப்படை பயிற்சிக் கல்லூரிக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்க்கிவைப்பு

விமானப்படை பயிற்சிக் கல்லூரிக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்க்கிவைப்பு

[2018/04/02]

தியத்தலாவையிலுள்ள இலங்கை விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கிவைக்கும் விழாவில் ஜனாதிபதியும் முப்படைகளின் பிரதானியுமான அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (ஏப்ரல், 02) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களும் கலந்து கொண்டார்.
இவ்விழாவிற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் வரவேற்றுள்ளார். இதேவேளை ஜனாதிபதி அவர்களால் இங்குள்ள இலங்கை விமானப்படை பயிற்சிக் கல்லூரிக்கு பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதி வர்ணம் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது, ஜனாதிபதிக்கு இலங்கை விமானப்படையினர் தமது இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கியுள்ளனர்.

தியத்தலவையிலுள்ள இலங்கை விமானப்படை பயிற்சிக் கல்லூரியி ஆனது மிகவும் பழமை வாய்ந்த ஒரு பயிற்சிக் கல்லூரியாகும். ஜனாதிபதி வர்ணமானது இராணுவ அமைப்பில் பெறக்கூடிய மிக உயர் விருதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். குறித்த ஜனாதிபதி வர்ண விருதானது நாட்டுக்காக ஆற்றிய சேவையினை கௌரவிக்குமுகமாக நாட்டின் தலைவரால் பெட்டாலியன் அல்லது படைப்பிரிவுகளுக்கு வழங்கி வைக்கும் உயர் விருதாககும். இதனை ஒரு உயர்ந்த அந்தஸ்தாகவும் மற்றும் மதிப்பாகவும் கௌரவம் கருதப்படுகிறது.

1952ஆம் ஆண்டு றோயல் சிலோன் விமான நிலையம் என ஆரம்பிக்கப்பட்ட இன் நிலையம் 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசானபின்னர் இலங்கை விமானப்படை தளம் தியத்தலாவ என பெயர்மாற்றம் பெற்றது. மேலும், இங்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும் படை வீரர்களுக்கு தேவையான ஆரம்ப கட்ட மற்றும் உயர்தர பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப்படை நிலையத்தில் அதன் பொன்விழாவின்போது 1976 ஆம் ஆண்டு முதலாவது ஜனாதிபதி வண்ண விருது விமானப்படைக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், பாதுகாப்பு படைகளின் பிரதானி எட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட விமானப்படை வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

     
     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்