மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/9/2018 9:31:37 PM இராணுவத்தினரால் மற்றொரு நீர்ப்பாசன சீரமைப்பு திட்டம் முன்னெடுப்பு


இராணுவத்தினரால் மற்றொரு நீர்ப்பாசன சீரமைப்பு திட்டம் முன்னெடுப்பு

[2018/04/09]

நாட்டினது விவசாய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் தேசிய திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், பொலன்னறுவை மாவட்டத்தில் இரண்டு நீர்ப்பாசன குளங்களை மறுசீரமைக்கும் பணியினை இலங்கை இராணுவம் முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மீவத்புர மற்றும் சிரான ஆகிய குளங்களின் சுத்திகரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை படையினர் ஆரம்பித்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு குளங்களும் 'பிபிதெமு பொலன்நறுவை' எனும் பொலன்னறுவை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் விஷேட திட்டத்தின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்விரு குளங்களும் இப்பகுதியில் காணப்படும் ஏராளமான வயல் நிலங்களுக்கு நீர் பாசனம் செய்வதுடன், இப்பகுதி வாழ் மக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாகவும் உள்ளன.

பல ஆண்டுகளாக, இவ்விரு குளங்களிலும் வண்டல் மண் சேர்தல் மற்றும் நீர் மேற்பரப்பில் நீர் தாவரங்கள் படர்ந்து காணப்படல் ஆகியவை காரணமாக அவற்றின் நீர் கொள்ளும் திறன் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் இராணுவம் இத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு தனது மனிதவளத்தையும் கனரக எந்திரங்களையும் பயன்படுத்திவருகிறது. இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் அதிகமான விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கக் கூடிய வகையில் நீர்ப்பாசனத் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மின்னேரியா ஹிங்குராக்கொடவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட 'சந்தன பொகுண' நீர் தேக்க திட்டத்தின் பணிகள் சுமார் 75% ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்