2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில்
திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு……
[2018/04/27]

2018 பொதுநலவாய விளையாட்டு
விழாவின் போது திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளுக்கு பாராட்டு
தெரிவித்து அவர்களுக்கு சன்மானம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால
சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்
இடம்பெற்றது.
இவ்விளையாட்டு விழாவில்
வரலாற்றில் முதல் முறையாக அதிகூடிய பதக்கங்களை இலங்கை வென்றெடுத்ததன் மூலம்
நாட்டிற்கு பெற்றுக்கொடுத்த கீர்த்தியை இட்டு அவ்விழாவில் போட்டியிட்ட
அனைவருக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.
அத்தோடு அவர்களின் எதிர்கால
விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்>
அவர்களின் வளர்ச்சிக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய மிக உயரிய ஒத்துழைப்பினை
பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையானது
ஒழுக்கமும் நன்னடத்தையும் மிக்க நல்ல மனிதர்களை உருவாக்குவதாக தெரிவித்த
ஜனாதிபதி அவர்கள்> சிறந்தவொரு சமூகத்தை நோக்கிய பயணத்தில்
விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக பெற்றுக்கொடுக்க வேண்டிய சகல
வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதாக இதன்போது தெரிவித்தார்.
இவ்வருட பொதுநலவாய
விளையாட்டு விழாவில் பழுதூக்கும் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திக்க
திஸாநாயக்க> வெண்கல பதக்கம் வென்ற ஜே.ஏ.சீ. லக்மால் மற்றும் பீ.டீ.ஹன்சனி
கோமஸ் ஆகிய வீர வீராங்கனைகளுக்கும் பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் முதல்
தடவையாக இலங்கையின் சார்பில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் வென்ற
வீராங்கனையாக வரலாறு படைத்த அனுஷா கொடிதுவக்கு மற்றும் வெண்கல பதக்கம்
வென்ற திவங்க ரனசிங்க மற்றும் இஷான் செனெவிரத்ன பண்டார ஆகிய வீர
வீராங்கனைகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இவ்வெற்றிகளுக்கு தமது
பங்களிப்பினை வழங்கிய பயிற்றுவிப்பாளர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
அமைச்சர் பைசர் முஸ்தபா>
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ்> முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர>
விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜயந்த விஜேரத்ன> விளையாட்டுத்துறை
அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.என்.பீ.பி. ஹேரத்
ஆகியோரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற வீர வீராங்கனைகள்>
விளையாட்டுச் சங்கங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில்
பங்கேற்றனர்.
நன்றி_ஜனாதிபதி செய்தி
ஊடகம் |