மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/27/2018 4:49:49 PM பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்ற முப்படை வீரர்கள் கௌரவிப்பு

பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்ற முப்படை வீரர்கள் கௌரவிப்பு

[2018/04/27]

விளையாட்டு அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில் முப்படையினர் அதிக பங்களிப்பு செய்துள்ளதாகவும், முப்படையினரின் விளையாட்டுத்துறையினை மேலும் முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்க அமைச்சு எப்போதும் தயாராக உள்ளதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா கோல் கோஸ்ட் 21வது பொதுநலவாய விளையாட்டு விழாவின் போது தமது திறமைகளை வெளிப்படுத்திய முப்படை வீர வீராங்கனைகளை பாராட்டி அமைச்சில் இன்று (ஏப்ரல், 27) இடம்பெற்ற நிகழ்வின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி, திரு.கபில வைத்தியரத்ன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், திரு. சுனில் சமரவீர அவர்களும் வருகை தந்திருந்தனர்.

இராஜாங்க அமைச்சரின் எண்ணக்கருவிற்கு அமைய அண்மையில் நிறைவுற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்கள் வென்ற முப்படை வீர வீராங்கனைகள் இவ்விஷேட நிகழ்வில், பாராட்டப்பட்டனர்.

இதன்போது உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் அவர்கள், பதக்கங்கள் வென்ற வீர வீராங்கனைகளை பாராட்டியதுடன், எதிர்காலத்தில் விளையாட்டுத்துறையில் நாட்டிற்கு கௌரவத்தையும் அதிக வெற்றியினையும் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இதன்போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் அவர்களும் வீர வீராங்கனைகளைகளுக்கு தனது வாழத்துக்களை தெரிவித்தார்.

இங்கு இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில், இலங்கை கடற்படை வீரர் இந்திக்க திஸாநாயக்க 69 கிலோகிராம் பழுதூக்கும் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும், இலங்கை இராணுவத்தை சேர்ந்த வீரர்களான சாஜன் சத்துரங்க லக்மால் 56 கிலோகிராம் பழுதூக்கும் பிரிவில் வெண்கல பதக்கத்தையும், லான்ஸ் கோபல் இஷான் பண்டார 56 கிலோகிராம் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கத்தையும், இலங்கை விமானப்படையின் முன்னணி விம்மனபபடை வீராங்கனை தினூஷா கோமஸ் 48 கிலோகிராம் பெண்கள் பழுதூக்கும் பிரிவில் வெண்கல பதக்கத்தையும் வென்ற நான்கு வீர வீராங்கனைகள் இன்று பாராட்டப்பட்டனர்.

மேலும், இவ்வீர வீராங்கனைகளுக்கு விஷேட நினைவுச்சின்னம் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், அவர்கள் சர்வதேச விளையாட்டு விழாவில் தங்கள் சாதனைகளை நிலைநாட்டியமைக்காக அதனை பாராட்டு. கடிதங்களும் வழங்கப்பட்டது. இலங்கை வீரர்களால் பெறப்பட்ட ஆறு பதக்கங்களில் நான்கு பதக்கங்கள் முப்படை வீரர்களால் சுவீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் (2018) அவுஸ்திரேலியா கோல் கோஸ்ட் இல் இடம்பெற்ற 21வது பொதுநலவாய விளையாட்டு விழாவின் பதக்கம் பெற்றுக்கொண்ட வரிசையில் இலங்கை 31வது இடத்தில் உள்ளதுடன் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் ஐந்து வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளது. மேலும், பொதுநலவாய விளையாட்டு விழாவின் எமது நாடு பெற்றுக்கொண்ட பதக்கங்களில் அதி கூடிய எண்ணிக்கையாக இது கருதப்படுகிறது. கோல்ட் கோஸ்ட் 2018 காமன்வெல்த் விளையாட்டானது நாட்டின் மிக வெற்றிகரமான ஒன்றாகும்.

இந்நிகழ்வில், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, கடற்படை தளபதி, அமைச்சின் அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்