மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/11/2018 2:41:06 PM வடக்கு மக்களுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைப்பு

வடக்கு மக்களுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைப்பு

[2018/06/11]

இலங்கை இராணுவத்தினரால் கடந்த சனிக்கிழமை (ஜுன், 09) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக கிளிநொச்சி பிரதேசத்தில் அங்கவீனமுற்ற பொதுமக்கள் பலர் நன்மையடைந்துள்ளனர். இந் நடவடிக்கையின் மூலம் குண்டசாலை உடல் ஊனமுற்றோருக்கான மையத்துடன் இணைந்து கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம், கிளிநொச்சி பிரதேசத்தில் அங்கவீனமுற்ற பொதுமக்களுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைத்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து பயனாளிகள், அரச அதிகாரிகளின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர்களிலிருந்து சுமார் 28 பொதுமக்கள் தெரிவுசெய்யப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் அவர்களுக்கான செயற்கை கால்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வார இறுதி நாட்களில், கிளிநொச்சி நல்லிணக்க மையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான செயற்கை கால்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வட பகுதி மக்களின் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் வகையில் இலங்கை இராணுவத்தினரால் இதுபோன்ற பல சமூக நலத்திட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்