மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/5/2018 5:08:49 PM 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைத்தள தேர்வு போட்டியில் விமானப்படை மற்றும் கடற்படை வெற்றி

2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைத்தள தேர்வு போட்டியில் விமானப்படை மற்றும் கடற்படை வெற்றி

[2018/07/05]

 

அண்மையில் இடம்பெற்ற சிறந்த வலைத்தள தேர்வுப் போட்டியில் (Best Web 2018) இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் உத்தியோகபூர்வ வலைத்தளங்கள் வெற்றிபெற்றுள்ளன. இலங்கை விமானப்படை வலைத்தளம் (www.airforce.lk) அரச வலைத்தள பிரிவில் போட்டியிட்டு தங்க விருதை வென்றுள்ளதுடன், இலங்கை கடற்படை வலைத்தளம் (www.navy.lk) அதேபிரிவில் போட்டியிட்டு வெண்கல விருதை வென்றுள்ளது. மேலும் கடற்படை வலைத்தளம் அரச வலைத்தளங்களில் பிரபலமான வலைத்தளமாக விளங்குகிறது.

இலங்கையில் சிறந்த இணையத்தளங்களை அங்கீகரிப்பதற்காக 8 வது தடவையாக எல்.கே. டொமைன் பதிவகம் "BestWeb.lk" போட்டியினை ஏற்பாடு செய்யப்பட்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஒன்பது பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற இப்போட்டியானது எல்கே டொமைன் கொண்ட அனைத்து வலைத்தளங்களுக்குமான திறந்த போட்டியாகும்.

இதேவேளை, இலங்கையின் பாராளுமன்ற இணையத்தளம் அரச பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்