மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/9/2018 6:11:05 AM இந்திய கடற்படையின் ‘த்ரீகான்ட்’ போர் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடற்படையின் ‘த்ரீகான்ட்’ போர் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

[2018/07/08]

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கடற்படையின் ‘த்ரீகான்ட்’ போர் கப்பல் இன்றையதினம் (ஜுலை 07) இலங்கைக்கு வருகைதந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன.

கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் உபால் குன்டு மற்றும் இலங்கையின் இந்திய உயர் ஆணையத்தில் துனை பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் ரவி ஷேகர் மிஷ்ரா ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை சந்தித்தனர். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மேலும் கடற்படையின் தலைமை பணியாளரான ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் ‘த்ரீகான்ட்’ போர் கப்பலுக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இயக்குநர் கடற்படை செயல்பாடுகள் கமடோர் சஞ்சீவ டயஸ் மற்றும் கடற்படைத் தலைமையகத்தில் பல அதிகாரிகல் கழந்துகொன்டனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்த இக் கப்பலின் குழுவினர் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நட்பு கால்பந்து போட்டியில் கழந்துகொள்வார்கள். மேலும் இக் கப்பல் எதிர்வரும் 09ம் திகதி இலங்கைக்கான விஜயத்தினைப் பூர்த்தி செய்து புறப்பட உள்ளனர்.

நன்றி: கடற்டை ஊடகம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்