மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/13/2018 4:25:59 PM 'ஹஸலக காமினி’ ஞாபகர்த்த தினம்

'ஹஸலக காமினி’ ஞாபகர்த்த தினம்

[2018/07/13]

இன்று (ஜுலை, 13) இடம்பெற்ற கோப்ரல் காமினி குலரத்தனவின் 27வது வருட ஞாபகார்த்த தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களும் கலந்து கொண்டார். ‘ஹஸலக காமினி’ என அறியப்படும் கோப்ரல் காமினி குலரத்தன 1991ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் சக படை வீரர்களின் உயிர்ளை பாதுகாப்பதற்க்காக தனது உயிரை தியாகம் செய்தார்.

இவ்வைபவம் வெளிநாட்டு அமைச்சில் இன்றுகாலை இடம்பெற்றது. இதன்போது மறைந்த போர்வீரரின் தாயாரான திருமதி. வைஜி ஜுலியட் அவர்களுக்கு விஷேட வெகுமதி ஒன்று அளிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் விடுக்கப்பட்ட விஷேட செய்திகளும் வாசிக்கப்பட்டன.

1966ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4ம் திகதி பிறந்த ஹசலக காமினி, இராணுவத்தில் யுத்தகள நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் அதியுயர் கௌரவ விருதான 'பரம வீர விபூஷண' விருதுக்கு உரித்துடையவர். கோப்ரல் காமினி குலரத்தன ஆனையிறவு முகாம் முற்றுகையின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள் நிறப்பப்பட்ட பயங்கரவாதிகளின் புல்டோசர் வாகனம் ஊடுருவ முற்பட்டபோது வெடிபொருட்களை தனது உடலில் சுமந்து அவற்றை சுயமாக வெடிக்கச் செய்ததன் மூலம் தடுத்து நிறுத்தினார். இலங்கை மாதாவின் வீரமிகுந்த மகனின் வீரதீரச்செயல் காரணமாக பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டது.

1991ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற ஆனையிறவு முகாம் முற்றுகையின்போது ஹசலக காமினியின் வீரதீரச்செயல் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சக படைவீரர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிர்ஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த யுத்த வீரரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்