மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/23/2018 4:03:18 PM நீரளவியல் விளக்கப்படங்கள் பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு

நீரளவியல் விளக்கப்படங்கள் பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு

[July 22 2018]

பாதுகாப்பு நடவடிக்கைகள் நிமித்தம் இலங்கை கடற்படையின் நீரளவியல் சேவையினால் தயாரிக்கப்பட்ட இரண்டு நீரளவியல் விளக்கப்படங்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களிடம் கடற்படையின் பிரதம நீரியல் அளவீட்டாளர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி அவர்கள் அண்மையில் (ஜூலை, 19) வழங்கிவைத்தார். பாதுகாப்பு அமைச்சில் செயலாளருடன் இடம்பெற்ற சந்திபின்போது அவர் இதனை வழங்கிவைத்துள்ளார்.

இச்சந்திப்பின்போது, பிரதம நீரியல் அளவீட்டாளர் அவர்களால் நாட்டின் நீரளவியல் தொடர்பான முன்னேற்றம் மற்றும் இலங்கை கடற்படையின் நீரளவியல் சேவையின் ஈடுபாடு பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், தேசிய பாதுகாப்புக்கு அமைய ஆழ்கடல் அளவீட்டு அட்டவணையினை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகளும் இடம்பெற்றன. மேலும் இந் நிகழ்வின்போது செயலாளர் அவர்களுக்கு இது தொடர்பான சிறிய ஆவணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்