மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/5/2018 6:45:09 PM புதிய ரணவிரு தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் இராணுவத்தளபதியினால் திறந்து வைப்பு

புதிய ரணவிரு தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் இராணுவத்தளபதியினால் திறந்து வைப்பு

[2018/08/04]

திருகோணமலை இராணுவ லொஜிஸ்டிக் கல்லூரியில் நிறுவப்பட்ட ரணவிரு தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களால் நேற்று (ஆகஸ்ட், 03) திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலுள்ள இராணுவ வீரர்காளின் பிள்ளைகள் மற்றும் துணைவியர்கள், திருமணம் முடிக்காத இராணுவ வீரர்காளின் சகோதர சகோதரிகள், பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் குறித்த பயிற்சி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு திறந்து வைக்கப்பட்ட ரணவிரு தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் 6வது நிறுவனமாக காணப்படுவதுடன், ஏனைய ஐந்தும் பனாகொட, அனுராதபுரம், கொகவில், குருவிட்ட மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. இங்கு 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்காக தகவல் தொழிநுட்பம் தொடர்பான விழிப்புணர்பு பாடநெறிகள், இலங்கை கணனி தேர்ச்சி உரிமம் பாடநெறிகள், கணனி கிராபிக்ஸ் டிசைனிங் பாடநெறிகள், கணனி வன்பொருள் பாடநெறிகள் , வலைத்தள வடிவமைப்பு பாடநெறிகள் என்பன இங்கு கற்பிக்கப்படுகின்றன.

இந்நிகழ்வில், பிரதம சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனெரல் நிலந்த ஹெட்டியாராச்சி, இராணுவ லொஜிஸ்டிக் கல்லூரி கொமடான் பிரிகேடியர் டபள்யூ ஜீ டீ வன்னியாரய்சி மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்