மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/16/2018 5:18:04 PM சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பொல்கஹவெல மக்களுக்கு இராணுவத்தினர் உதவி

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பொல்கஹவெல மக்களுக்கு இராணுவத்தினர் உதவி

[2018/08/16]

பொல்கஹவெல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவம் வகையில் மேற்கு - பாதுகாப்புப் படை தலைமையக இராணுவத்தினர் செவ்வாயன்று (14 ஆகஸ்ட்) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்பிரகாரம், ஏகல்ல, ரத்மல்ஹொட, இம்புல்ஹொட, கெபலிட்டிவல, குளுகென்டிவல, வாதவ போன்ற பிரதேசங்களில் உள்ள 48 வீடுகள், பாடசாலை மற்றும் எழு வியாபார நிலையங்கள் சேதமாகியுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் இராணுவவீரர்கள் ஒரு சில மணித்தியாலங்களில் குறித்த பகுதிகளில் ஏற்பட்ட வீதித்தடைகளை அகற்றியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்