மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/23/2018 4:23:58 PM படைவீரர்களினால் சமூக சேவைகள் பல முன்னெடுப்பு

படைவீரர்களினால் சமூக சேவைகள் பல முன்னெடுப்பு

[2018/08/23]

பட்டிகுடியிருப்பு கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட மாராதோடை, கட்குளம், ஊஞ்சலடி பிரதேசங்களை சேர்ந்த பொது மக்களுக்காக 62ஆவது படையணியின் கீழ் உள்ள படைவீரர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் வைத்திய முகாம் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (ஆகஸ்ட்,19) கிரிசுத்தன் முன்பள்ளி வளாகத்தில் இடம் பெற்றது.

மூன்று வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், இராணுவ தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் பங்குபற்றிய இவ் வைத்திய முகாமில் சுமார் 237 பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதேவேளை, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப் பிரிவின் படைவீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு மற்றும் கழிப்பறை என்பன ஆணைவிழுந்தான்குளம் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த திருமதி முத்துசாமி தெய்வானை எனும் பெண்மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பெண்மணி தனது கணவனை இழந்த நிலையில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையினை அறிந்த படை வீரர்கள் இப்பெண்மணிக்கான இருப்பிடத்தை அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்