மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/29/2018 10:14:17 AM ஒய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த காலமானார்

ஒய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த காலமானார்

[2018/08/28]

ஒய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த அவர்கள் தனது 77 ஆவது வயதில் திங்கள்கிழமையன்று (ஆகஸ்ட், 27) காலமாணார். இலங்கை இராணுவத்தின் 14 ஆவது இராணுவத் தளபதியாக கடமையாற்றிய இவர் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் நேற்று காலமாணார்.

இவர், இராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1999-2000 காலப்பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாகவும், ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக வேந்தராகவும் சேவை செய்துள்ளதுடன், பிரேசில் நாட்டின் இலங்கைக்கான தூதுவராகவும் கடமை வகித்துள்ளார்.

1941 ஆண்டு பிறந்த இவர் பன்னிபிடிய தர்மபால வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியை ஆரம்பித்து பின்னர் கொழும்பு ஆனந்த கல்லூரியில் தனது கல்விகளை மேற்கொண்டார். மேலும் இவர் 1961 ஆண்டு இராணுவத்தில் கடெட் அதிகாரியாக இணைந்துகொண்டார்.

இவரது பூதவுடல் கொழும்பு 7 இல் இலக்கம் 410/104 பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்