மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/29/2018 11:09:17 AM அமெரிக்க கடலோர காவல்படையின் “சேர்மன்” கப்பலை இலங்கை கடற்படை கையேற்பு

அமெரிக்க கடலோர காவல்படையின் “சேர்மன்” கப்பலை இலங்கை கடற்படை கையேற்பு

[2018/08/28]

முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான “சேர்மன்” இனை இலங்கை கடற்படை வைபவரீத்தியா கையேற்றுள்ளது. ஹவாய், ஹொனொலுவில் நேற்று (ஆகஸ்ட், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களால் உத்தியோகபூர்வமாக இக்கப்பலினை கையேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பலினை இலங்கை கடற்படை தளபதி கையேற்குமுன்னர் ஐக்கிய அமெரிக்கா கடலோர காவல்படையின் உதவிக் கமடான் கையகப்படுத்தல் மற்றும் பிரதம கையகப்படுத்தல் அதிகாரி அவர்களால் வைபவரீதியாக இக்கப்பலின் ஆணைதிரும்பிப் பெறப்பட்டது.

“சேர்மன்” என்றழைக்கப்படும் இக்கப்பலானது அமெரிக்ககாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கபெற்ற இரண்டாவது கடலோர காவல்படை கப்பலாகும். 115 மீட்டார் நீளமுடைய இக்கப்பல் தன்னகத்தே ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகிய வசதிகளையும் கொண்டு திகழ்கிறது. இதன் மூலம் கடல் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது உதவிகள் வழங்குதல், மேலும் இலங்கை தீவை சுற்றியுள்ள ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகிய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.

இங்கு இடம்பெற்ற நிகழ்வின்போது, கடற்படை தளபதியினால் குறித்த கப்பலுக்கு நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரி கெப்டன் அருண தென்னகோன் அவர்களிடம் இக்கப்பல் கையளிக்கப்பட்டது. குறித்த கப்பலினை எதிவரும் 2019ஆண்டு ஏப்ரல் மாத முற்பகுதியில் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கப்பல் கையளிக்கும் வைபவத்தில், ஹவாயில் உள்ள இலங்கை தூதுவர் திரு. பெடெ குரே, அமெரிக்கவுக்கான பசிபிக் கடற்படை கடல்சார் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர், ரெட்ம் மார்க். எச். டெல்டன், சர்வதேச கையகப்படுத்துதலின் பிரதி பிரதம அதிகாரி திரு. டொட் ரெய்னாட் மற்றும் ஹவாயில் உள்ள இலங்கை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்