மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/3/2018 5:58:07 PM இராணுவ தகவல் தொழிநுட்ப பயிற்சி நிலையத்தில் முதற்தொகுதி மாணவர்களினால் தகவல் தொழிநுட்ப கற்கைநெறி பூர்த்தி

இராணுவ தகவல் தொழிநுட்ப பயிற்சி நிலையத்தில் முதற்தொகுதி மாணவர்களினால் தகவல் தொழிநுட்ப கற்கைநெறி பூர்த்தி

[2018/09/03]

திருகோணமலை, கிளப்பன்பேர்க் பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தகவல் தொழிநுட்ப பயிற்சி நிலையத்தினால் அளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கற்கைநெறியினை மாணவர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இராணுவத்தினரினால் இலவசமாக அளிக்கப்படும் இக்கற்கைநெறிக்கு குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைவாக மூவினகளைச் சேர்ந்த சுமார் 52 மாணவர்கள் இவ்வாரம்ப தகவல் தொழிநுட்ப கற்கைநெறிக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

45 மணித்தியாலங்கள் கொண்ட இக்கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. 10 - 15 வயதுகளைக் கொண்ட பாடசாலை மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவினை மேம்படுத்தும் வகையில் இக்கற்கைநெறி வடிவமைக்கப்பட்டிருந்ததுடன் இராணுவத்தின் அனுபவம் வாய்ந்த தகவல் தொழிநுட்ப விரிவுரையாளர்களினால் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தினரினால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்தும் வகையில் இதுபோன்ற பல்வேறு சமூக நல சேமலாப திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இராணுவத்தின் தகவல் தொழிநுட்ப பயிற்சி நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் இப்பிராந்திய மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் அவர்களின் வாழ்விற்கு ஒளியூட்டும் வகையிலும் அமைத்துள்ளமை குறிப்படத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்