மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/7/2018 3:50:18 PM யாழ் பிராந்தியத்தில் மீண்டும் ஒரு தொகை காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

யாழ் பிராந்தியத்தில் மீண்டும் ஒரு தொகை காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

[2018/09/07]

பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு தொகை காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்பட்டது. முன்னர் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 4.4 ஏக்கர் காணி மைலிட்டியில் நடைபெற்ற வைபவத்தின்போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைலடி கலைமகள் வித்தியாலயத்தின் 2.75 ஏக்கரும் , சண்டிலிப்பாயில் பொதுமக்களுக்கு சொந்தமான 1.19 ஏக்கரும் மற்றும் குறும்பச்செட்டி கூட்டுறவு நிலையம், சமூச நிலையம் காணப்பட்ட 0.5 ஏக்கரும் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டன. இதற்கான உத்தியோகபூர்வமான ஆவணங்களை யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் அரச அதிகாரிகளிடம் கையளித்தார்.

இந் நிகழ்வின் போது யாழ் பிரதேசத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கலைமகள் வித்தியாலய மாணவர்கள் 200 பேருக்கு இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் பிராந்திய சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யாழ் தீபகற்பத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் பொதுமக்களின் காணியை அவர்களிடம் ஒப்படைக்கும் அரசின் கொள்கைக்கு ஏற்ப விடுவிக்கப்பட்டன. இதற்கேற்ப இந்த ஆண்டு (2018) ஜூன் மாதம், இராணுவம், வட மாகாணத்தில் தெலிப்பாய், கராச்சி மற்றும் மாரித்தியம்பற்று ஆகிய பகுதிகளில் சுமார் 120 ஏக்கர் காணியை மீள அளித்தது. இதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை கிளிநொச்சிக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உரிமையாளர்களிடம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்