மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/10/2018 12:21:40 PM இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி 'SLINEX-2018' திருகோணமலையில் ஆரம்பம்

இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி 'SLINEX-2018' திருகோணமலையில் ஆரம்பம்

[2018/09/08]

இவ்வாண்டுக்கான 'SLINEX-2018' இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி திருகோணமலையில் நேற்று (செப்டம்பர், 07) ஆரம்பமாகியது. எழு நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி கிழக்கு பிராந்தியத்தில் உள்ள திருகோணமலை கடற்பகுதியில் எதிர்வரும் வியாழக்கிழமை (13) வரை நடைபெறஉள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான எஸ்எல்என்எஸ் சாயுறால, எஸ்எல்என்எஸ் சமுதுற மற்றும் எஸ்எல்என்எஸ் சுரநிமில ஆகியவற்றுடன் இணைந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா, ஐஎன்எஸ் கிரிச், மற்றும் ஐஎன்எஸ் கோர தேவி ஆகியவற்றுடன் இரண்டு டோர்னியர் விமானங்கள் உட்பட ஒரு உலங்குவானூர்தி ஆகியவற்றுடன் இரு நாடுகளையும் சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆயிரம் பேர் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது

இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கடற்படை பணிகள், கப்பல் பயணம், தொடர்பாடல், கடற்பரப்பில் கப்பல்களுக்கிடையில் நபர்கள் மற்றும் பொருட்களை பரிமாறிக்கொள்ளுதல், உலங்குவானூர்தி மற்றும் கடல்சார் ரோந்து விமான நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் போன்ற கூட்டு பயிற்சிகளை மேற்கொள்ளுதல், கடத்பிரந்தியத்தில் தேடுதல் மற்றும் மீட்பு தந்திரோபாய பயிற்சிகளை மேற்கொள்ளல் என்பன இடம்பெற உள்ளது. இப்பயிற்சிகள் ஊடாக இலங்கை கடற்படையின் விஷேட படையணியினர், துரித நடவடிக்கைகளுக்கான படையணியினர் மற்றும் இலங்கை விமானபடையின் விமானப்படை வீரர்கள் ஆகியோர் இப்பயிற்சியில் கலந்து பயன்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இக்கூட்டுப் பயிற்சியில் பங்கெடுக்கும் வகையில் மூன்று இந்திய கடற்படை கப்பல்களும் கடந்த வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர், 07) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இக்கூட்டுப் பயிற்சியானது இவ்வருடத்திலிருந்து வருடாவருடம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய கடற்படை கப்பல்களுக்கான கொடிவரிசை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் தினேஷ் கே திருப்பாதி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்துள்ளனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்