மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/22/2018 1:35:51 PM அங்கவீனமுற்ற யுத்த வீரருக்கு புதிய வீடு அன்பளிப்பு

அங்கவீனமுற்ற யுத்த வீரருக்கு புதிய வீடு அன்பளிப்பு

[2018/09/21]

 

ரணவிரு சேவா அதிகாரசபையின் “விருசுமித்திர“ வீடமைப்பு திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்றினை அங்கவீனமுற்ற கடற்படை மெஸ் உதவியாளர் எஸ் எஸ் தசநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பண்டாரகம மில்லானிய பகுதியில் நேற்று (செப்டம்பர், 20) இடம்பெற்ற நிகழ்வின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் இப்புதிய வீட்டினை வழங்கிவைத்துள்ளார்.

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 1.2 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் இலங்கை கடற்படை சிவில் பொறியியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயங்கரவாத தாக்குதலால் காயங்களுக்கு உள்ளான இக்கடற்படை வீரர் 2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து மருத்துவ அடிப்படையில் ஓய்வூதியம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவி திருமதி. அனோமா பொன்சேகா, கடற்படை நலன்புரிச்சங்க பணிப்பாளர் நாயகம், கொமோடோ சுதத் லேல்வால, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் பிரதி முகாமையாளர் திரு. சமந்தா சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட முப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்