மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/2/2018 4:45:30 PM இராணுவ தின கொண்டாட்டங்கள் மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பம்

இராணுவ தின கொண்டாட்டங்கள் மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பம்

[2018/10/02]

இலங்கை இராணுவம் தனது 69 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை எதிர்வரும் 10ம் திகதி கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் கொடிகளுக்கு சர்வ மத ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வினை முன்னெடுத்துள்ளது.

இதற்கான முதற் கட்ட நிகழ்வு கடந்தமாதம் (செப்டம்பர்) 28ம் திகதி கண்டி புனித தலதா மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் போதி பூஜை மற்றும் அன்னதானம் வழங்கல் ஆகியன இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தொடரின் மற்றுமொரு நிகழ்வு அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியில் நேற்றையதினம் (ஒக்டோபர், 01) இடம்பெற்றது. இவ்விரு நிகழ்வுகளிலும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.

இராணுவ தின த்தை முன்னிட்டு இடம்பெறம் சர்வத மத நிகழ்வில் கிருஸ்தவ வழிபாட்டு நிகழ்வு பொரல்ல புனித ஆல் செய்ன்ட் தேவாலாயத்திலும் இஸ்லாமிய வழிபாட்டு நிகழ்வுகள் கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாயலிலும் இடம்பெறவுள்ள அதேவேளை இந்து மத வழிபாட்டு நிகழ்வுகள் கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பல வானேஷ்வர் கோவிலிலும் இடம்பெறவுள்ளன.

1949ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இராணுவம், சுமார் 24 ரெஜிமென்ட்களை கொண்டுள்ளது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் புரையோடிக் காணப்பட்ட பயங்கரவாதத்தை பூண்டோடு இல்லாமல் செய்வதற்கு இலங்கை இராணுவம் முன்னின்று செயற்பட்டது. மனிதாபிமான நடவடிக்கைகளை பூரனப்படுத்திய இராணுவத்தினர் 2009களின் பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் தேசிய இலக்குகளுக்கு அமைவாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்