மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/11/2018 6:39:23 PM 'ரணவிரு செவன' வில் செயற்கை அவையவங்களை தயாரிப்பதற்கான புதிய வசதிகள் ஸ்தாபிப்பு

'ரணவிரு செவன' வில் செயற்கை அவையவங்களை தயாரிப்பதற்கான புதிய வசதிகள் ஸ்தாபிப்பு

[2018/10/11]

செயற்கை அவயவங்கள் மற்றும் அவை தொடர்பான உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை றாகமவில் உள்ள 'ரணவிரு செவன' வில் நேற்று (ஒக்டோபர்,10) திறந்து வைக்கப்பட்டது.இக் குறித்த தயாரிப்புக்கான புதிய வசதிகள், இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்கன ஆரோக்கிய மையத்தில் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

இவ் உற்பத்தி நிறுவனத்தில் ரூ. 80 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் ரூ. 80 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழிற்சாலை கட்டிடம் ஆகிய புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.இத் தொழிற்சாலையில் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற இராணுவ தொழினுட்பவியலாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் ஆரோக்கிய மையத்தில் தங்கியிருக்கும் போர் வீரர்கள் செயற்கை கால்களை சரியான முறையில் பயன்படுத்தும் வழிமுறைகளை அறிந்துகொள்வதற்கு எதுவாக அமையும்.

தற்போது 'ரணவிரு செவன' வில் சுமார் 115 அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்புதிய தொழிற்சாலையை அங்குரார்ப்பணம் நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்