மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/25/2018 10:24:36 PM வெளிநாட்டு தேசிய மாணவ படையணியின் பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

வெளிநாட்டு தேசிய மாணவ படையணியின் பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2018/10/25]

சார்க் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த தேசிய மாணவ படையணியின் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவான் விஜேவர்தன அவர்களை இன்று (ஒக்டோபர், 25) பாகாப்பு அமைச்சில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 தேசிய மாணவ படையணியின் அதிகாரிகள் மற்றும் 68 மாணவச் சிப்பாய்கள் உள்ளடங்கிய அதிதிகள் குழுவினர் வருகைதந்திருந்தனர்.

இதன்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தேசிய மாணவ படையணி பிரதிநிதிகளுக்குமிடையில் சினேகபூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

அண்மையில் ( ஒக்டோபர், 23 ) ரன்தம்பை, தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற வருடாந்த தேசிய மாணவர் படையணியின் ஹேர்மன் லூஸ் கிண்ண போட்டி முகாமில் பங்கேற்க இக்குழுவினர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் எம் எம்எஸ் பெரேரா பீஎஸ்ஸீ, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், மற்றும் அந்நாடுககளைப் பிரதிநிதிதித்துவப்படுத்தி அந்நாட்டு பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்