மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/31/2018 12:37:24 PM கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்

[2018/10/30]

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுகயீனமுற்ற மீனவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர், 28) சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டார். மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைப்புசெய்யப்பட அதிவேக தாக்குதல் படகு குறித்த பகுதிக்கு சுகயீனமுற்ற மீனவரை மீட்பதற்கு அனுப்பப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மீனவர் “ரன்புதா " மீன்பிடி படகின் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அம்பலன்கொடை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச்சென்றிருந்தார். இதன்போது கடுமையான நெஞ்சு வலி காரணமாக அவதியுற்றநிலையில், காலி துறைமுகத்திலிருந்து சுமார் 85 கடல் மைல்கள் துரத்தில் இருந்த இம்மீனவர் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராபிடிய போதனா வைத்தியசாலைக்கு கொன்டுசெல்லப்பட்டுள்ளார்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்