மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/31/2018 2:51:56 PM புருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு விஜயம்

புருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு விஜயம்

[2018/10/31]

புருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி அதிமேதகு கஸ்டன் சின்டிம்வோ அவர்கள் வெளிசரவில் உள்ள இலங்கை கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு ஞாயிற்றுக்கிழமையன்று (ஒக்டோபர், 28) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட செட்ரிக் படகுகள் மற்றும் வேவ் ரய்டர் படகுகள் ஆகியவற்றை மேற்பார்வை செய்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு வருகைதந்த இத்தூதுக்குழுவினர் செட்ரிக் படகினை கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தியுள்ளதுடன், அதனை தமது உள்நாட்டு நீர்நிலைகளில் பணிகளில் ஈடுபடுத்தவும் தீர்மானித்துள்ளனர்.

இவ்விஜயத்தின்போது, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவிந்திர ரனசிங்க ஆகியோரும் இணைந்திருந்திருன்தனர்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது புருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி அவர்கள் வெளிசர படகு தளத்திற்கு சென்றிருந்தார்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்