மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/2/2018 4:47:08 PM பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியிலுள்ள வெளிநாட்டு இராணுவ மாணவ அதிகாரிகள் வடக்கு விஜயம்

பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியிலுள்ள வெளிநாட்டு இராணுவ மாணவ அதிகாரிகள் வடக்கு விஜயம்

[2018/11/02]

அண்மையில் (ஒக்டோபர், 29) சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியில் கல்வி பயிலும் வெளிநாட்டு இராணுவ மாணவ அதிகாரிகள் குழுவினர் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டனர்.

தமது கல்வியின் ஒரு பகுதியாக இங்கு விஜயம் மேற்கொண்ட கற்கைநெறி 12 இல் கல்வி பயிலும் மாணவ அதிகாரிகள் குழுவினர் இப்படைத்தலைமையகத்தின் பொறுப்புக்கள் மற்றும் அவர்களின் பாங்கு மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின் பின்னரான இராணுவ ஒத்துழைப்புக்கள் என்பன பற்றிய விளக்கங்களை பெற்றுக்கொண்டனர். இதன்போது யாழ் தீபகற்பத்திலுள்ள சில முக்கிய இடங்களையும் பார்வையிட்டனர்.

மேலும், இம்மாணவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்துக்கும் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது இம்மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் ஆனையிறவில் உள்ள ஹசலக காமினி நினைவு தூபிக்கு சென்று அங்கு தமது அஞ்சலியினையும் செலுத்தினர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்துக்கும் விஜயம் மேற்கொண்டிருந்த இம்மாணவர்கள் “கிளிநொச்சி மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள்” எனும் தலைப்பில் இடம்பெற்ற முன்வைப்பின்போது, சிறந்த அரச பொறிமுறையினை உருவாக்குவதில் இராணுவ செயற்பாடுகள், அவர்களின் திறமை, ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்புக்கள் போன்ற செயற்பாடுகளில் அறிவினை பெற்றுள்ளனர்.

அத்துடன், முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்துக்கும் விஜயம் மேற்கொண்டிருந்த இம்மாணவர்கள் இங்கு இடம்பெற்ற நிகழ்வின்போது இப்பிராந்திய இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிவினையும் பெற்றுக்கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்